விசாரணைக்காக மீண்டும் தோண்டப்பட்ட பெண்ணின் ஜனாஸா! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 October 2018

விசாரணைக்காக மீண்டும் தோண்டப்பட்ட பெண்ணின் ஜனாஸா!


கடந்த செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதியில் தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி அடக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.உக்குவளையைச் சேர்ந்த  சித்தி சாஹிரா மொஹமட் சவாஹிர் என அறியப்படும் 38 வயது பெண்ணின் ஜனாஸாவே இவ்வாறு பங்கலாமட முஸ்லிம் மைய மாவடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பின்னணியிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட்  ஆஸிக்

No comments:

Post a Comment