அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான இரண்டாம் கட்ட நியமனம் - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான இரண்டாம் கட்ட நியமனம்2016 (2017) ஆம் ஆண்டு அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிதாக 893 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து சிறப்பித்ததுடன், ஏனைய அதிதிகளாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கமகே உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment