வீதியிலிறங்கி போராடத் தயார்: கிரியல்ல! - sonakar.com

Post Top Ad

Monday, 29 October 2018

வீதியிலிறங்கி போராடத் தயார்: கிரியல்ல!


மைத்ரிபால சிறிசேனவின் அரசியலமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் வீதியிலிறங்கிப் போராடத் தயார் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.நாடாளுமன்ற அவைத்தலைவர் எனும் அடிப்படையிலும் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டும்படி தான் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவிக்கின்ற போதிலும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீதிப் போராட்டங்களில் குதிக்கப் போவதாக லக்ஷமன் தெரிவிக்கின்றமையும் சில நாட்கள் முன் வரை கூட்டு எதிர்க்கட்சியே இவ்வாறு தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment