நேற்றோடு அமைச்சரவை கலைந்து விட்டது: ஜி.எல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

நேற்றோடு அமைச்சரவை கலைந்து விட்டது: ஜி.எல்!


நேற்று மாலையோடு அமைச்சரவை கலைந்து விட்டதாகவும் அதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம் முடிந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.


கூட்டு எதிர்க்கட்சி சார்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மஹிந்தவின் நியமனம் சட்டரீதியானது எனவும் தெரிவிக்கிறார்.

எனினும், 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதமானது எனவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment