போலி தகவல் வெளியிட்ட அமைச்சர்கள் தானாக முன் வர வேண்டும்: சமரசிங்க - sonakar.com

Post Top Ad

Thursday, 18 October 2018

போலி தகவல் வெளியிட்ட அமைச்சர்கள் தானாக முன் வர வேண்டும்: சமரசிங்கஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தன் மீதான கொலை முயற்சியின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாகக் கூறியதாக இந்திய பத்திரிகைக்கு தகவல் வெளியிட்ட அமைச்சர்கள் தானாக முன் வந்து தமது பிழையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என தெரிவிக்கிறார் மஹிந்த சமரசிங்க.அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி அவ்வாறு சொல்லவில்லையெனவும் குறித்த தகவல் பொய்யாக சோடிக்கப்பட்டது எனவும் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகமும் குறித்த தகவலை மறுத்துள்ளதுடன் ஜனாதிபதி இன்று மோடியுடன் தொலைபேசியில் உரையாடி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment