எரிபொருள் பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 29 October 2018

எரிபொருள் பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு


பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பால் இன்று நாட்டில் பல பாகங்களிலும் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களில் வாகனச் சாரதிகள் பெற்றோல் நிரப்புவதற்காக முந்தியடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.


குறிப்ப தலைநகர் கொழும்பிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றதுடன் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நண்பகல் வேலைக்கு முன்பாகவே எரிபொருள் இல்லாது மூடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அதிகமாக முச்சக்கர வண்டிச் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் வாகனப் போக்குவரத்தும் வழமையைவிட சற்றுக் குறைவாகவே தலைநகரில் காணப்பட்டன.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment