முஹம்மத் நபியை அவமதிப்பது 'பேச்சு சுதந்திரமில்லை': ஐரோப்பிய நீதிமன்றம்! - sonakar.com

Post Top Ad

Friday 26 October 2018

முஹம்மத் நபியை அவமதிப்பது 'பேச்சு சுதந்திரமில்லை': ஐரோப்பிய நீதிமன்றம்!


முஸ்லிம்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதும், எழுதுவதும் பேச்சு சுதந்திரம் எனும் வரையறைக்குட்பட்டதில்லை என தீர்ப்பளித்துள்ளது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம்.



2009ல் அவுஸ்திரியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் இரு கருத்தரங்குகளை நடாத்தி அண்ணல் நபிகளாரை அவமதிக்கும் வகையில் கருத்துரைத்து வந்ததன் பின்னணியிலான வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட குழுவினரால் விசாரிக்கப்பட்டிருந்தது.

இதன் போதே, இச்செயலானது பேச்சு சுதந்திரத்தை மீறிய செயற்பாடு என நேற்றைய தினம் (25) ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையும் இதே பெண்மணிக்கு அவரது நாட்டின் நீதிமன்றமும் 2011ம் ஆண்டே அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment