ஜமால் கஷோகி: டொனால்ட் ட்ரம்புக்குத் திருப்தியில்லை! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 October 2018

ஜமால் கஷோகி: டொனால்ட் ட்ரம்புக்குத் திருப்தியில்லை!


கமால் கஷோகி, தூதரகத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அது தொடர்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தனக்குத் திருப்தியில்லையென்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.இதேவேளை முஹம்மத் பின் சல்மானுக்கு இது தொடர்பில் தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன் சவுதி முழுமையான விளக்கத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும், இதன் பின்னணியில் சவுதிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தினால் அமெரிக்காவுக்கே நஷ்டம் எனவும் விளக்கமளிததுள்ளார்.

துருக்கி தரப்பில், சம்பவம் பற்றிய முழு விபரத்தைத் தாம் வெளியிடவுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், சவுதி அரேபியா மீது குற்றஞ்சாட்டுவதை துருக்கி இதுவரை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment