கிண்ணியா சஹ்தியா மதரசா புதிய நிர்வாகத்திடம் கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

கிண்ணியா சஹ்தியா மதரசா புதிய நிர்வாகத்திடம் கையளிப்பு


1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதல் ஆறு மதரசாக்களில் ஒன்றான கிண்ணியா சஹ்தியா மதரசா நேற்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தலைமையிலான புதிய நிர்வாகக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.


கடந்த சில வருடங்களாக நிர்வாக குறைபாடுகளால் மந்த நிலையில் சென்ற இந்த மதரசாவின் கல்வி நடடிக்கைகளை சீர்படுத்தி முன்னைய காலத்தை போன்று இலங்கையின் சிறந்த மார்க்க கல்வியை வழங்கும் மதரசாவாக வழிநடத்தவுள்ளதாக புதிய நிர்வாகக் குழு தெரிவித்துள்ளதோடு இனி இந்த மதரசாவின் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர் தலையீடு இன்றி நிர்வாகக் குழுவின் மூலமே நிர்வகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் முப்பாட்டனார் மாஹத் ஹாஜியாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மதரசாவில் மார்க்கக்கல்வி பயின்ற ஹாபிழ்கள் பலர் நாடு முழுவதும் மார்க்கப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறுப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment