ஜமால் கொலை முன் கூட்டியே திட்டமிடப்பட்டது: அர்துகான்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

ஜமால் கொலை முன் கூட்டியே திட்டமிடப்பட்டது: அர்துகான்!ஜமால் கஷோகியின் கொலை முன் கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் குறித்த நபர் தூதரகத்துக்குள் நுழைய முன்பதாக 15 சவுதி ஏஜன்டுகள் வெ வ்வேறு குழுக்களாக இஸ்தான்புல் வந்தடைந்ததாகவும் விளக்கமளித்துள்ளார் துருக்கி அதிபர் அர்துகான்.எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றித் தெரிவிக்கப்  போவதாக முன்னராக அர்துகான் அறிக்கை விட்டிருந்த நிலையில், சவுதி அரேபியாவை நேரடியாகக் குற்றஞ்சாட்டும் அளவில் அவரது பேச்சு அமையாது என முன்னரே எதிர்வு கூறப்பட்டிருந்தது.

இப்பின்னணியில், குறித்த கொலை முன் கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் கொலையில் தொடர்புபட்டவர்களை துருக்கியில் விசாரிக்க வேண்டும் எனவும் தனது விளக்கவுரையை அர்துகான் முடித்துள்ளார். இதேவேளை, சில மேற்கு நாடுகள் பங்கேற்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ள போதிலும் சவுதி முதலீட்டாளர் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment