தென் கிழக்குப் பல்கலைக்குப் பூட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 October 2018

தென் கிழக்குப் பல்கலைக்குப் பூட்டு!


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத் தொகுதி கடந்த சில வாரங்களாக மாணவர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பொலிசார் தலையிட்டும் தீர்வு கிடைக்காததால் பல்கலைக் கழகத்தை காலவரையறையின்றி மூடியுள்ளதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.


பகிடிவதையில் ஈடுபட்டதன் பின்னணியில் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை மீளவும் சேர்க்கக் கோரியே சுமார் 17 மாணவர்கள் இவ்வாறு நிர்வாக கட்டிடத் தொகுதியை ஆக்கிரமித்திருந்ததாகவும் நீதிமன்றம் மாணவர்களை அகற்ற உத்தரவிட்டிருந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிசார் தலையிட்டும் அது சாத்தியமாகாததால் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது..

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே மாணவர்களை இடைநிறுத்த உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment