ஆட்கடத்தல்: மேலும் ஒரு கடற்படை அதிகாரி கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 October 2018

ஆட்கடத்தல்: மேலும் ஒரு கடற்படை அதிகாரி கைது!


2009ம் ஆண்டு கொட்டஹேனயில் வைத்து இருவர் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் கடற்படை அதிகாரி ஒருவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட வேளையில் குறித்த நபர்களிடமிருந்து 8 லட்ச ரூபா பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே விவகாரத்தின் பின்னணியில் ஏலவே கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் கமான்டர் சம்பத் தயாநந்த இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment