உண்மையைச் சொல்லுங்கள்: சவுதிக்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 October 2018

உண்மையைச் சொல்லுங்கள்: சவுதிக்கு ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்!


ஜமால் கஷோகி விவகாரத்தில் சவுதி அரேபியா உண்மையை வெளியிட வேண்டும் எனவும் கொலை பற்றிய விபரங்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.



அமெரிக்காவில் தங்கியிருந்து சவுதி அரச பரம்பரையை விமர்சித்து வந்த ஜமால், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தார். இந்நிலையில், ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து குறித்த நபர் தூதரகத்துக்குள் ஏற்பட்ட கை கலப்பில் இறந்து விட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

எனினும், ஜமாலின் உடலுக்கு என்ன ஆனது மற்றும் எவ்வாறு அவர் இறந்தார் என்பது தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஐரோப்பிய நாடுகள் சவுதி அரசு சம்பவம் பற்றிய உண்மையை வெளியிட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறித்த நாடுகள் சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment