ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 21 October 2018

ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர் உளநல செயலமர்வு


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளிலுள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான மாணவர் உளநல உதவி நிகழ்ச்சி தொடர்பான விசேட செயலமர்வு (20) ம் திகதி சனிக்கிழமை வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் பாடசாலைகளில் மெல்லக் கற்கும் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்கள் மத்தியில் கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்துவது தொடர்பாகவும், மாணவர்கள் கற்றலை இலகுவாக கற்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன பற்றியும், அத்தோடு வகுப்பறையில் ஒவ்வொரு மாணவர்களின் செயற்பாடுகளையும் ஆசிரியர்கள் அவதானித்து அம் மாணவர்களின் ஆற்றல்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும் என்பன போன்ற விடயங்கள் இவ் விசேட செயலமர்வில் விரிவுரைகள் நடாத்தப்பட்டது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபிர் கரீம் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு இந்நிகழ்வை மேற்பார்வை செய்வதற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.ஏ.றிஸ்மியா பானு அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment