குப்பை நகரபிதா சாணக்கியம்/சரணாகதி? - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

குப்பை நகரபிதா சாணக்கியம்/சரணாகதி?


பொதுவாக இரண்டு விடயங்களில்தான் புத்தள மக்கள் அதிகம் அக்கறைப் படுவார்கள். ஒன்று ஏதாவது ஒரு தேர்தல் அல்லது ஒரு இஸ்லாமிய சொற்பொழிவு.

ஆனால் இந்த இரண்டிலும்தான் மிக இலகுவாக இவர்களை ஏமாற்ற முடியும் என்பது சம்பந்தப்பட்டோருக்கு மிக நன்றாக தெரியும். ஏனெனில் இந்த இரண்டு விடயங்களிலும்  மக்கள் தங்களுக்கு போதிய விளக்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டாலும், அவர்களிடம் இவை சம்பந்தமான அறிவும், தெளிவும் மிகக் குறைவு என்பதை அவர்களின் தீர்மானங்கள் காட்டிக் கொடுத்துவிடும். இந்த தீர்மானங்கள் சுய விசாரணையின்  அடிப்படையில் இல்லாமல் "அவர்" சொன்னால் சரியாகத்தன் இருக்கும் என்ற ஒரு பலவீனமான புரிதல். ஆனாலும் காலம் சற்று மாறிவிட்டதை இந்த கொழும்பு குப்பை புத்தளத்தில் கொட்டி, குவித்து, களஞ்சியப்படுத்தி இத்தியாதி, இத்தியாதி என்ற விடயதில் சற்றுக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

காரணம் சூழல், சுற்றாடலைப் பேணல், சுத்தம், சுகாதாரம் பற்றி யோசித்தல் என்ற விடயங்கள் மிக பெரிதாக இல்லாவிட்டாலும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் ஒன்றிக்கான அடிப்படை விடயங்கள் பல திட்டமிடப்பட்ட முறையில் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை நடை முறைக்கும் வருவதான அம்சங்களை குறிப்பிடலாம். ஆகவே இனியும் இந்த குப்பை விடயத்தை வைத்து யாரும் பொருளாதார வியாபாரமோ அல்லது அரசியல் வியாபாரமோஅலது வேறு ஏதும் வியாபரமோ செய்ய முடியாத படி விடயங்கள் முன்னேறிச்செல்கின்றன.

 12.10.18ன் சர்வமத பிரார்த்தனை ஒன்றுகூடலுக்கு முன்னால்

செப்டம்பார் மாத மத்தியின் இறுதி பகுதியில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க புத்தளம் வந்ததும் அந்த தருணத்தை பயன் படுத்தி புத்தளம் நகர பிதா கொழும்பு குப்பை சம்பந்தப்பட்ட அமைச்சர்- குப்பை எதிர்ப்பு குழு ஆகிய இரண்டு பகுதியின்ரையும் விவாத முறையிலான  கருத்துப் பரிமாற்ற நிகழ்வொன்றுக்கு ஒழுங்கு செய்து தம்பக்க நியாயத்தை அடுத்த தரப்பினருக்கு எடுத்துக் காட்டும் படி செய்திருந்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் வழங்கப்பட்ட சந்தர்பத்தை சரியான முறையில் பயண்படுத்த குப்பைக்கு எதிரான நம்மூர் அணி தவறியதாக நகர பிதாவினால் குற்றம் சாட்டப்பட்டதும் யாவரும் அறிந்ததே. ஆனால் குப்பைக்கு எதிரான நம்மூர் அணியோ தாங்கள் நகர பிதாவினால் ஏமாற்றாப்பட்டதாகவும் அமைச்சர் ரணவக்கவின் திட்டத்துக்கு நகரபிதா பச்சை கொடி காட்டி அதற்கு பகரமாக நகரபிதாவின் அடுத்த தேர்தல் நலனை நோக்கிய   சில "அபிவிருத்தி" களை நம்மூருக்கு கொண்டுவரும் திட்டத்தினை கட்சிதமாக செய்ததாகவும் இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

நகர பிதாவின் மனதில் என்ன தோன்றியதோ கடந்த மாதத்தின் இறுதி பகுதியில் ஹுதா பள்ளிக்கு அருகாமையில் பெரிய அறிவிப்போடு இந்த குப்பை சம்பந்தமான தனதும், புத்தளம் நகர சபையினதும் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவு படுத்தல் என்ற ரீதியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்..  ஆனாலும் அந்த கூட்டமோ கொழும்பு குப்பை புத்தளத்துக்கு கொண்டுவரப்படுவதற்கான  அல்லது அவை இங்கே கொண்டுவர முடியாது என்பதற்கு போதுமான எந்தவிதமான நியாயமான காரணாமும் சொல்லாமல். அவை இங்கே கொண்டுவரப்பட்டு களஞ்சியபடுட்தப்படும் போது அதனால் தரைக் கீழ் நீருக்கும், சூழல் சுற்றாடலுக்கும் பாதிப்பில்லை என்று அமைச்சர் ரணவக்க சொன்ன விடயத்தை ஆதரிக்கும் போக்கிலும், கூடவே இந்த திண்மக்கழிவில் இருந்து ஏற்படும் லீசெய்ற் (leachaite) திரவ கசிவு நீண்டகாலத்தில் மிக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற நம்மூர் குப்பை எதிப்பாளார்/சூழலியளாலர்களின் கூற்றை அவர்களே விஞ்ஞான முறையில் நிறுவ வேண்டும் என்ற ஒரு நியாயமில்லாத வாதத்தையும் நகர பிதா முன்வைத்தார்.

நகர பிதாவின் அந்த நிலைப்பாடு கூட்டத்தின் முன்வரிசையில் இருந்து கைதட்டி, விசில் அடித்த மகாஜனங்களின் பலரை சந்தோசப்படுட்தியதே தவிர மக்களுக்கு.தெளிவு பிறக்கவில்லை என்பதோடு மேலதிக சந்தேகங்களும் அவர்கள் மனதில் குடி கொள்ள ஆரம்பித்தன. இந்த சந்தேகமானது வாழும் சாட்சியாக இருக்கின்ற உயிர்கொல்லி அனல்மின்சார நிலையமாகும். ஆகவே  குப்பை கொண்வரப்படுவதற்கான நியாயத்தை மக்களிடையே சாணக்கியமாக சொல்லிவிட்டதாக நகர பிதா நம்பினாலும் அவர் சம்பிகையின் திட்டத்திற்கு சரணாகதியாகிவிட்டார் என்பது அதிலே தெளிவாக தெரிந்தது. 

இதை அடிப்படையாக வைத்து நகர பிதாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதள போராட்டம்  ஏற்பட்ட நிலையில்தான் இந்த குப்பை திட்டத்ததுக்கு எதிராக காட்டமான விழிப்புணர்வு கூட்டங்கள், ஆர்பாட்டங்களும் ஏற்பாடுசெய்யப்பட மறுபுறத்தில்  நகர பிதாவின் நிலைப்பாட்டின் நியாமில்லா தன்மை சரியாக அவரின் கவனத்துக்கு கொண்டுவரப்பபட்டதும், அவருக்கு எதிரான மக்களின் குரல் அதிகரிக்கவும் அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து இந்த கொழும்பு குப்பை புத்தளம் கொண்டு வருவதற்கு எதிராக புத்தமள மக்களுடன் தானும் இணைந்து கொள்வதான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த போதும் தான் நடு நிலையாக நிலைமைகளை அணுகுபவன் என்ற ஒரு பிரமையை மக்கள் மத்தியிலே ஏற்படுத்தும் முகமாக கொழும்பு குப்பையில் முழு நாட்டுக்கும் பங்குண்டு, ஆகவே கொழும்பு குப்பையை நாடு முழுக்க பிரித்து கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை காணலாம் என்ற நமக்கு சம்பந்தமில்லாத,  நடை முறை சாத்தியமில்லாத ஒரு கருத்தை முன்வைத்தது அவரின் அணுகுமுறையில் உள்ள குறைபாடு என்பதோடு, சாணக்கியம் தவறிய சரணாகதி நிலையே அது  என்றாலும். முழு குப்பையும் புத்தளம் கொண்டுவருதலுக்கு எதிர்ப்பை காட்டி சத்தியாக்கிரக பந்தலுக்கு வந்து கொழும்பு குப்பைக்கு எதிராக குரல் எழுப்பியது பாராட்டப்பட வேண்டிய அம்சமே.      

05.10.2018ல்  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் அவர்கள் இது தொடர்பாக நகர சபையாசல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு மாற்று வழி காண வேண்டும் என்றும் அதுவரை இந்த சத்தியாகிரகம் தொடரப்பட வேண்டும் என்பதான கருத்தை வைத்ததோடு மிக விரைவில்  இந்த விடயத்தில் அக்கறையுள்ள அமச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து சம்பந்தப்பட்ட அமைசர்களுடன் பேச்சுவார்தை நடத்த நடவடிக்கை எடுப்பேன் என்ற உத்தரவாதத்தை முன்வைத்தார். 

மறு நாள் அகில இயலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கிழக்கின் அமீர் அலியுடன் இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொன்டதோடு தான் பாராளுமன்றில் ஏற்கனவே பேசியதற்கிணங்க இந்த குப்பை பிரச்சினை புத்தள மக்கள் மேல் ஏற்கனவே திணிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளோடு மேற்கொள்ளப்படும் புதிய திணிப்பாகும் என்றும், இந்த  நியாயமற்ற நடவடிக்கையை நிறுத்த தன்னால் முடியுமான அனைத்தையும் செய்வேன் என்ற உறுதி மொழியையும் கூறினார். 

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர் பதவி  ஒன்றை வகிக்கும் புத்தளம் நகர பிதா பாயிஸ் அவர்கள் தமது கட்சி தலைவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் போது. புத்தளம் நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்னும் ஓரிரு தினங்களில் நகர சபை உறுப்பினர்களும் இன்னும் சில தேர்தெடுக்கப்பட்ட பிரமுகர்களும் கொழும்பு சென்று முஸ்லீம்களின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமாக  அரசாங்கத்துடன் கொழும்பு குப்பை புத்தளத்துக்கு கொண்டுவராமல் தடுப்பது பற்றிய ஆலோசனை நடத்துவதாக கூறினார்.

நகர சபை தீர்மானம் (சுருக்கம்)

10.10.2018 அன்று சுமார் நான்கு மணி நேர விவாதிப்புக்குபின்,  கொழும்பு (சிங்கப்பூர் உட்பட்ட) குப்பை அறுவைக்காடு, சேராக்குழி பகுதியில் கொட்டப்படுவதற்கு இந்த சபை தமது எதிர்பை தெரிவிக்கின்றது . ஆனாலும் கொழும்பு குப்பை ஒரு தேசிய பிரச்சினையாக பெரு நகர் (Mega Polis) திணைக்களம் கருதுவதாலும், இதற்கு பொறுப்பான அமைச்சர் இலங்கையின் அனைத்து மாவட்ட மக்களுமே கொழும்பு குப்பைக்கு காரணம் என்று சொல்லுவதாலும் இந்த குப்பையில் ஒரு பகுதியை தாம் பெற மற்றைய பகுதியை ஏனைய மாவட்டங்களுக்கு பிரித்து கொடுப்பதன் மூலம் தீர்வை காணலாம் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம்தான் எல்லாவித சாணக்கியங்களையும் விழுங்கி ஏப்பம்விடும் சரணாகதி என்றால் அது மிகையாகாது. காரணம் நகர பிதா இந்த தீர்மானத்துக்கு சொன்ன நியாயம். அதாவது பாரிய செலவில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தை நிறுத்து என்று நேரடியாக சொன்னால் அரசாங்கம் அதை கணக்கில் எடுக்காது, ஆனால் இந்த கொழும்பு குப்பையை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்துக் கொடு என்று கேட்டால் இது  பாரிய சிக்கல்களும், செலவும் கொண்ட ஆலோசனை. இதை நாடு முழுக்க நடத்தமுடியாது, ஆகவே புத்தளத்துக்கும் இதை கொண்டு போக முடியாது எனவே இதுவரை செய்யப்பட்ட அத்தனை ஆயத்தங்களையும்,ஏற்பாடுகளையும், செலவினங்களையும் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தை அரசாங்கம் அப்படியே கைவிட்டுவிடும். இருப்பெதில் பிரயோசனம் எடுக்காமல் அரசு அனைத்தையும் நிறுத்திவிடும் என்ற நப்பாசை  விளக்கத்தில் மறைமுக சரணாகதியை தவிர அப்படி என்ன சாணக்கியம் இருக்கின்றது என இன்னும் விளங்கமுடியாமல் இருக்கின்றது.     

இந்த தீர்மானம் என்பது புத்தளம் நகர சபை தன் அதிகார வரம்பை மீறிய ஒரு செயலாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது. காரணம் இந்த குப்பை கொட்டும் இடமானது புத்தளம் நகரத்தில் இருந்து சுமார் 32 கி.மீ தூரத்தில் உள்ள புத்தளம் நகர சபை நிர்வாக எல்லைக்கு அப்பால் உள்ள இடம் என்பதோடு கொழும்பு குப்பை புத்தளம் பிரதேசத்துக்கு கொண்டுவரக்கூடாது என்ற விடயத்தில் புத்தளம் நகர சபை தமது மானசீக ஆதரவை காட்டும் முகமாக ஒரு பிரேரணையை நிறைவேற்ற மக்களால் எதிர்பார்க்கப்படார்களே தவிர, இந்த குப்பை பிரச்சினைக்கு மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவோ அல்லது தமக்கு அதிகாரம் இல்லாத விடயத்தில் இந்த சாத்வீக போராட்டத்தின் ஒட்டு மொத்த நோக்கத்துக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றவோ எதிர்பார்க்கப்படவில்லை.  

மேலும் மூன்றாம் கிழமையில் கால் பதித்துள்ள  இந்த சத்தியாகிரக நடவடிக்கைளை புத்தளம் நகர சபையும் ஏற்பாடு செய்யவில்லை. இது தன்னார்வ தொண்டர் இயக்கங்களால் ஏற்பாடு செய்யப்பாட்டது என்பதுடன் இந்த சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்கள் யாரும் இதுவரை கொழும்பு குப்பையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வாதாக சொல்லவும் இல்லை. இனி எப்போதும் சொல்லப் போவதுமில்லை. ஆகவே இந்த தன்னார்வ தொண்டர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் நகர சபை தன்முனைப்பில் தீர்மானம் நிறைவேற்றியது என்பது அதிகார எல்லை மீறல் அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. அதாவது சாணக்கியம் சரணாகதியில் முஃபடியும் நிலை. 

சர்வமத பிரார்த்தனை கூட்டமும் பேரணியும்

கடந்த12.10.2018ல் புத்தளம் கொழும்பு முகத்திடலில் நடை பெற்ற மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய பெளத்த மதகுரு ஒருவர் கொழும்பு குப்பையை நிர்வகிக்க வேண்டியவர்கள் கொழும்பு மாநகர நிர்வாகமே தவிர வேறுயாருமில்லை. அவர்களால் முடியாவிட்டால் அதை அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றார். இதம் மூலம் அவர் தெளிவாக சொன்ன விடயம் எக்காரணம் கொண்டும் எந்தளவு குப்பையும் இங்கு கொண்டுவரப்படமுடியாது என்பதே. ஆனாலும்  நகரபிதா அவர்கள்  மேற்படி கூட்டதிற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே புத்தளம் பெரிய பள்ளி இஸ்லாமிய மதகுருக்களுக்கு நகர சபையின் தீர்மானத்தை நியாயப்படுத்தியும், தான் சாணக்கிய அணுகுமுறையில் செய்ததாக எண்ணிய இந்த சரணாகதி தீர்மானத்தின் படி அரசாங்கம்  செய்வதறியாது தடுமாறி முழு திட்டத்தையும் கைவிடும் போது இந்த அறுவைக்காட்டு பகுதியை புத்தளம் நகர சபை கையகப்படுத்திக்கொள்ள ( புத்தளம் நிர்வாக எல்லையைத் தாண்டிய பகுதி எவ்வாறு புத்தளம் .நகர.சபைக்கு கிடைக்கப்போகின்றது என்பதை இன்னும் நகர பிதா விளங்கப்படுத்தவில்லை என்பது வேறு விடயம்)நகர அபை திர்மானம் உதவியாக  அமையுமென்றார் தனது சரணாகதி அரசியலை சாணக்கியம் நிறைந்தாகக் காட்டிக் கொண்டார். 

இந்த சர்வ மத குழுவின் ஒரு சாரார் எந்தளவு குப்பையும் புத்தளத்துக்கு வேண்டாம் எனும் போது இந்த இஸ்லாமிய மத குருக்கள் நகர சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள எந்த நியாயமும் இல்லை என்ற போடதும் நகர சபையின் 3ம் வட்டார்  உறுப்பினரான திரு. ரபீக் அவர்கள் நகர சபையின் இந்த சரணாகதி தீர்மானத்தை இஸ்லாமிய மதகுருக்கள் ஏற்றுக் கொண்டுள்ளாதாக கூறியுள்ளார்.

ஆக நகர சபையின் கனவு சாணக்கியும் சரணாகதி என்று ழுமையாக நிரூபனமாகும் போது இந்த குப்பைக்கு எதிரான மக்கள் நகர சபைக்கு எதிராகவும் திரும்ப எல்லா சாத்தியங்களும் உள்ளன, அப்போது அரசியல் வியாபாரமாக்கப்படும் நம் உள்ளூர் அரசியல் கலாச்சாரம் முடிவுக்குவரும்.      .

2018ன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலம்

தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் களைகட்டியபோது அதிலே என்றுமில்லாதவாறு ஒரு திடீர் திருப்பம் நடந்தேறியது, அதுதான் ஸ்ரீ லங்கா ஜமாத் ஏ இஸ்லாமி என்ற சமய அமைப்பு மக்களுக்கு தேர்தல் தொடர்பான அரசியல் அறிவூட்டல் நிகழ்வொன்றை பல்லாயிரம் ரூபா பணச்செலவில் மேடையமைத்து புத்தளத்தில் நடத்தியது.  மக்கள் இப்படி ஒரு விடயத்தை செய்யும் படி இவர்களிடம் கேட்காத போதும். மக்களுக்கு அரசியல்   அறிவூட்டல், தெளிவூட்டல் என்ற போர்வையில் ஜமாத்( இன்னும் வெளிப்டையாக ஏற்றுக்கொள்ள மறுக்கும்) தமது அரசியல் கட்சியான  NFGG (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) க்கு பிச்சாரம் செய்தனர் என்பது மக்கள் இன்னும் மறந்திருக்க நியாயமில்லை.   ஆனாலும் ஜமாத் ஏ இஸ்லாமி இயக்கம் ஒரு சமூக பிரச்சினைக்கு, புத்தள பிரதேசத்தின் இன்றைய எரியும் பிரச்சினக்கு  கொடுக்கும் முக்கியத்துவம் அவர்கள் அரசியல் கட்சி நடவடிக்கைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட மிக அற்பமானது என்பதை அவர்களுடைய இரண்டு நடத்தைகள் மக்களூக்கு காட்டிக் கொடுத்துவிட்டது. ஒன்று சத்தியாகிரகம் இரண்டு கிழமைகளை தாண்டிய பிறகு , நிகழ்வுகளின் போக்கை நாடி பிடித்து பார்த்து  15ம் நாளே அவர்கள் அதில் கலந்து கொண்ட விடயம். இரண்டு எந்த அரசியல் கட்சியும் தம் கட்சியின் அடையாள பாதகைகளை முன் நிறுத்தாத போதும் இவர்கள் மாத்திரம் தம் கட்சியின் அடிம் பொறிக்கப்பட்ட பாதகையை தாங்கிச்சென்றது. ஆக இங்கும் அவர்களுக்கு மக்கள் பிரச்சினையை விட தமது அடையாள அரசியலே முக்கியம் பெற்றுள்ளது. 

மக்களின் விருப்பு வெறுப்புகளை புரியாமல் வெவ்வேறு கோலங்களில் மக்களிடம் வியாபாரம் செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதிகளும், சமய தலைவர்களும் ஒரே வர்க்கத்தினரே. எனவே அரசியல் வாதிகளுக்கு எதிராக எழும் மக்கள் இந்த சமயவாதிகளுக்கு எதிராக எழவும் தயங்கமாட்டார்கள். ஆகவே இந்த இரு தரப்பாரும் சாணாக்கியமாக நடந்து கொள்ள முடியாவிட்டாலும் மக்களை சரணாகதி நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம். அது உங்களை அழிக்கும், ஒட்டுமொத்த சமூக இயக்கத்தையும் பாதிக்கும். 


- Mohamed  SR Nisthar

3 comments:

Ishthi said...

You are completely wrong about Jamath e islami and NFGG alliance

Mohamed Razmi said...

சிறந்ததோர் அலசல். சோனகர் சமூகத்தை பீடித்த இரண்டு பீடைகளை அடையாங் காட்டுகிறார் கட்டுரையாளர்.

வெற்றுக் கோஷங்களை வித யதார்த்தங்கள் கன்னத்தில் அறையும் காலமிது.

"தனித்துவ அரசியலும்..... அரைநூற்றாண்டு அழைப்புப் பணியும்" என்ன பண்ணி முடிக்கப் போகின்றனர் என்று பார்ப்போம்!

Unknown said...

தலைப்பில் உள்ள "குப்பை"என்ற வார்த்தை நகர பிதாவுக்கான பெயரடைமொழி(adjective) அல்ல. தலைப்பி வார்த்தைகளுக்கிடையே போதியளவு இடைவெளி இடப்படவில்லை.குழப்பத்துக்கு மனம் வருந்துகிறோம்.

Post a comment