மைத்ரி சொன்னது சொன்னதுதான் : இந்திய பத்திரிகை! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

மைத்ரி சொன்னது சொன்னதுதான் : இந்திய பத்திரிகை!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் இந்திய உளவுத்துறை ரோ தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை பற்றி தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென தெரிவிக்கிறது இந்து பத்திரிகை.


தமது செய்தியாளர் உறுதியான தகவலையே வழங்கியதாகவும் ரோ தொடர்பு பட்டிருப்பதாக மைத்ரி தெரிவித்திருந்தமையில் தமக்கு சந்தேகமில்லையெனவும், மைத்ரி  தனது கருத்தை மாற்றியமைக்க முனைவதாகவும் குறித்த பத்திரிகை நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது.

எனினும், ஊடகங்களே அவ்வாறு தகவல் வெளியிட்டதாகவும் தாம் அப்படிக் கூறவில்லையெனவும் ஜனாதிபதியும் அவர் சர்பாக ஜனாதிபதி செயலகமும் மறுப்பு வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment