தூதரகத்துக்குள்ளேயே ஜமால் கஷோகி கொலை: ஏற்றுக் கொண்டது சவுதி! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

தூதரகத்துக்குள்ளேயே ஜமால் கஷோகி கொலை: ஏற்றுக் கொண்டது சவுதி!


இஸ்தான்புல்லில் அமைந்துள் சவுதி தூதரகத்துக்குள் வைத்தே ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளது சவுதி அரேபியா.இப்பின்னணியில் 18 சவுதி பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள் சவுதி அரச ஊடகம், தூதரகத்துக்குள் ஏற்பட்ட கை கலப்பொன்றிலேயே ஜமால் இறந்துள்ளதாக தெரிவிக்கிறது.

கடந்த 2ம் திகதி சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால் கஷோகி திரும்பி வராத நிலையில் அவர் தூதரகத்துக்குள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் விசாரணை நடவடிக்கைகளின் பின் சவுதி இத்தகவலை வெளியிட்டுள்ளமையும் சவுதி உளவுத்துறையின் பிரதித் தலைவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment