தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 22 October 2018

தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்!


கல்வி எமது உரிமை. இவ் உரிமைகளை சீரழிக்காதே!! பொலிசார் சட்டத்தை அமுல்படுத்தவில்லை!!! அரசே! விரைந்து நடவடிக்கை எடு!!! என்ற கோஷங்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் 22.10.2018 திங்கட்கிழமை காலை 9 முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சில கோரிக்கைகளை முன்வைத்து சில மானவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை ஆக்கிரமித்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன்காரணமாக பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. பல்கலைக்கழக நிர்வாகிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி குறித்த மாணவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பல்கலைக்கழகத்தை சுமுக நிலைக்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள்,நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து குறித்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தொகுதியை ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கு எதிராக பொலிசார் சட்டத்தை அமுல் படுத்தாமல் இருப்பதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment