நான் அப்படிச் சொல்லவில்லை: மோடிக்கு விளக்கமளித்த மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 October 2018

நான் அப்படிச் சொல்லவில்லை: மோடிக்கு விளக்கமளித்த மைத்ரி!


தன்னைக் கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான ரோ இருப்பதாக தான் கூறவில்லையென இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசியூடாக விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



முன்னதாக மைத்ரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்ததுடன் சில வேளைகளில் நாட்டின் தலைவர்களுக்குத் தெரியாமலேயே உளவு நிறுவனங்கள் திட்டங்கள் தீட்டுவதாகத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், பின்னர் ஜனாதிபதி செயலகம் ரோ அமைப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லையென மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில் மைத்ரி - மோடியுடன் தொலைபேசியூடடாக விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment