அர்ஜுனவின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

அர்ஜுனவின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்!


தெமட்டகொட பகுதியில் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.


தன்னை ஒரு மணி நேரம் தடுத்து வைத்து அநாகரிக அரசியல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அர்ஜுன, தனது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியைப் பறிக்க முனைந்த போதே அவர் சுட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அரசியல் வன்முறைகள் ஆரம்பித்துள்ளதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளமையும் மஹிந்த தரப்பு அதிகாரத்தை வசப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment