அமைச்சரவை பங்கீடு: மஹிந்த - மைத்ரி பரஸ்பர இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

அமைச்சரவை பங்கீடு: மஹிந்த - மைத்ரி பரஸ்பர இணக்கம்!


நல்லாட்சி நாசமாக்கப்பட்டு விட்டதாகக் கூறி மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டாட்சியில் கை கேர்த்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமைச்சரவை தொடர்பில் புரிந்துணர்வு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆகக்கூடியது 25-30 அமைச்சு பதவிகளை நியமித்து 'நல்லாட்சி'யை நிரூபிக்கும் சவாலுடன் இக்கூட்டணி இயங்கப் போவதாகவும் இதில் மஹிந்த 15: மைத்ரி 10 எனும் அடிப்படையில் தற்சமயம் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்நிலையில் திங்களன்று புதிய அமைச்சரவை எதிர்பார்க்கப்படுகின்றமையும், தானே தொடர்ந்தும் பிரதமர் என தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலேயே தங்கியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment