கொழும்பில் குவிந்துள்ள ஐ.தே.க ஆதரவாளர்கள்: பொலிஸ் குவிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 October 2018

கொழும்பில் குவிந்துள்ள ஐ.தே.க ஆதரவாளர்கள்: பொலிஸ் குவிப்பு!


மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் திரண்டிருக்கும் நிலையில், வன்முறைகள் இடம்பெறாத வண்ணம் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தாம் ஜனநாயகத்தை வேண்டியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கொல்லுப்பிட்டி பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment