கொலையாளிகளுக்கு தகுந்த 'தண்டனை': முஹம்மத் பின் சல்மான் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 October 2018

கொலையாளிகளுக்கு தகுந்த 'தண்டனை': முஹம்மத் பின் சல்மான் சூளுரை!


ஜமால் கஷோகியின் கொலையாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப் போவதாக சூளுரைத்துள்ளார் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.பாரிய சர்வதேச அழுத்தத்துக்கு மத்தியில் குறித்த நபர் தூதரகத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் துருக்கி - சவுதி உறவுகளை சீர் குலைக்க இக்கொலை நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையில் பிளவு உருவாக அனுமதிக்கப் போவதில்லையெனவும் கொலையாளிகளைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்கப் போவதாகவும் சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் வைத்து முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment