கொழும்பு: தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 October 2018

கொழும்பு: தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!


மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டி பாரிய விழப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசியல் கலப்பில்லாத இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படிப் பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள். யுவதிகள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள், மலையக இளைஞர்கள், வடகிழக்கு இளைஞர்கள். மலையகத்தின் உறவுகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஐந்து லாம்புச் சந்தியூடாக காலிமுகத்திடலுக்கு வருகை தந்தபோது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனக் கருதி அவர்களை அவ்வாறு வரவிடாது பொலிஸார் பேரூந்துகள் மூலம் அனுப்பி வைத்மை குறிப்பிடத்தக்கது.


இதன்போது கூட்டு ஒப்பந்தத்ததை இரத்துச் செய்தல், தமக்கு ஆயிரம் ரூபா தரவேண்டும், 200 வருட இருண்ட வரலாற்றுக்கு ஒளியேற்றுவோம், எங்கள் வியர்வைக்கான விலையைக் கேட்கின்றோம், கண்ணீரை மாற்றுவோம், ஆயிரம் ரூபாவிற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சம்பளத்தை உயர்த்து, எம்மை அடிமைகளாக்காதே எனப் பல்வேறுபட்ட வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் உணர்வு பூர்வமாக கோசமிட்ட அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது இந்த ஆர்ப்பாட்டம் மூலம் மலையக மக்களுக்காக ஆரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன்போது ஜகாதிபதிக்கு அவர்கள் மகஜர் ஒன்றினையும் வழங்கியுள்ளனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment