
அங்கொட லொக்கா மற்றும் மாகந்துர மதுஷ் ஆகிய பாதாள உலக பேர்வழிகளின் சகாவென அறியப்பட்ட பண்டா, அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 4ம் திகதி ஒருவில பகுதியில் பொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த நபர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் அதிகரிக்கவே நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment