19ம் திருத்தச் சட்டம்: மொழிபெயர்ப்பில் 'தவறு': மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 October 2018

19ம் திருத்தச் சட்டம்: மொழிபெயர்ப்பில் 'தவறு': மைத்ரி!


19ம் திருத்தச் சட்டத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்துள்ளதாக வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.எனவே, ஆங்கில மொழி பெயர்ப்பையன்றி சிங்கள மொழியிலான ஆவணத்தை அவதானிக்கும்படியும், அதனடிப்படையில் தனக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் உண்டெனவும் மைத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை தொடர்பில் வெளிநாடுகள் தமது பிரஜைகளுக்கு அவதானமாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றமையும் வன்முறை பற்றி எச்சரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment