மஹிந்தவுக்கு NYT மீண்டும் சவால்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 July 2018

மஹிந்தவுக்கு NYT மீண்டும் சவால்!


மஹிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து தேர்தல் செலவுக்காகப் பணம் பெற்றுக்கொண்டதாகத் தாம் வெளியிட்ட தகவல் தொடர்பில் தம்மைத் தொடர்பு கொண்டு ஆட்சேபனையிருந்தால் அது குறித்து பேசுவதை விடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார் நியு யோர்க் டைம்ஸ்.


ஆசிரிய பீடத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ள குறித்த பத்திரிகை, உள்நாட்டில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் படுவது ஊடகத்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச முடிந்தால் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரட்டும் என ஏலவே அஜித் பெரேரா சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment