சாய்ந்தமருது: மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது 'ஜனாஸா வாகனம்' - sonakar.com

Post Top Ad

Monday 2 July 2018

சாய்ந்தமருது: மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது 'ஜனாஸா வாகனம்'


சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் கோரிக்கைக்கு அமைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  முயற்சியால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களால் கடந்த வருடம் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்திற்கு புத்தம் புதிய ஜனாஸா வாகனம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.

இப்பிரதேச மக்களின் முக்கியமான தேவையாக இருந்த இந்த ஜனாஸா வாகனம் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில மாதங்களாக மக்களின் பயன்பாட்டிற்கு விடமுடியாத நிலைமையில் இருந்தது. இந்நிலைமைக்கு சிலர் சில காரணங்களை முன்வைத்தாலும், இதில் யார் தரப்பிலும் பிழையில்லை என்பதும், சில தவிர்க்க முடியாத சூழு்நிலைகள் காரணமாகவே சில காலம் பயன்படுத்த முடியாமலிருந்தது என்பதும் தெரியவருகிறது.


எனினும், இந்த நிலைமையை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு  தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அதனை மக்களின் பாவனைக்கு விரைவாக விடக்கூடியவாறான நடவடிக்கைளை துரிதமாக எடுத்து, தற்போது அவ்வாகனம் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பெயரில் பதியப்பட்டு இலக்கத்தகடுகளும் பெறப்பட்டுள்ளன.

குறித்த வாகனத்தின் இலக்கத்தகடு, மற்றும் அதன் ஆவணங்களும் இன்னும் ஓரிரு தினங்களில் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் ஒப்படைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து இந்த ஜனாஸா வாகனத்தை மக்களின் தேவைக்காகப் பயன்படுத்துவதில் எந்தவிதமான சிக்கல்களும் இருக்காது. குறித்த வாகனத்தை அன்பளிப்பு செய்து அதன் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுத்தமைக்காக இப்பிரதேச மக்கள் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஜனாஸா வாகனம் பல்வேறு விமர்சனங்களுடன் பள்ளிவாசலின் ஓரிடத்தல் தரித்து நின்றதும் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment