பெரமுனவில் 'சேர' மாட்டேன்: தயாசிறி சூளுரை! - sonakar.com

Post Top Ad

Monday, 2 July 2018

பெரமுனவில் 'சேர' மாட்டேன்: தயாசிறி சூளுரை!


ஒரு நிறுவனம் நிலை குலைந்தால் அதனை சீராக்குவதே கடமையெனவும் தற்சமயம் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் பெரமுன கட்சியின் உறுப்பினராக ஒரு போதும் சேரப் போவதில்லையென தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்படுத்த வேண்டிய கடமையிருக்கின்ற நிலையில் அக்கட்சியைக் கைவிட்டு இன்னொரு கட்சியில் சேர வேண்டிய தேவை தமக்கில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் யாரும் அவ்வாறு பெரமுனவில் சேரவும் இல்லையெனவும் தெரிவிக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் தயாசிறி உட்பட 16 பேர் அரசை விட்டு விலகித் தனித்தியங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment