மஹிந்தவுக்கு 'மேலும்' பணக்காரனாக ஒரு வாய்ப்பு: அஜித் சவால்! - sonakar.com

Post Top Ad

Monday, 2 July 2018

மஹிந்தவுக்கு 'மேலும்' பணக்காரனாக ஒரு வாய்ப்பு: அஜித் சவால்!


சீனாவிடம் மஹிந்த ராஜபக்ச பணம் பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ள நியு யோர்க் டைம்சுக்கு எதிராக முடிந்தால் அவர் வழக்காடட்டும் என சவால் விடுத்துள்ளார் பிரதியமைச்சர் அஜித் பெரேரா.அமெரிக்க சட்டங்களின் பிரகாரம் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தாம் விரும்பிய தொகை இழப்பீட்டைக் கோர முடியும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதனை முழுமையாக செலுத்த நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மஹிந்த ராஜபக்ச பணக்காரனாக இது மேலும் ஒரு வாய்ப்பென தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் தேர்தல் செலவுக்காக  6 மில்லியன் டொலரை சீனா வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலை மஹிந்த தரப்பு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment