அநுராதபுரம்: அரச வங்கியில் கொள்ளை! - sonakar.com

Post Top Ad

Monday, 2 July 2018

அநுராதபுரம்: அரச வங்கியில் கொள்ளை!


அநுராதபுரம், தலாவ பகுதியில் இயங்கி வரும் அரச வங்கியொன்றின் கதவுகளை உடைத்து உள் நுழைந்துள்ள திருடர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகங்களையும் உடைத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை வங்கியை மூடி திறப்புகள் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment