12 பில்லியன் கடன்; பெற்றோல் பிரச்சினையில் ஸ்ரீலங்கன்! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

12 பில்லியன் கடன்; பெற்றோல் பிரச்சினையில் ஸ்ரீலங்கன்!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய ரூ. 12 பில்லியன் நிலுவையை எதிர்வரும் புதன்கிழமைக்குள் செலுத்தாவிடின் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெற்றோல் வழங்கப் போவதில்லையென எச்சரித்துள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் மற்றும் இலங்கை மின்சார சபையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குப் பெருந்தொகை பணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவிக்கிறார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வெளிநாட்டு பங்குதாரர்களைத் தேடும் அரசின் முயற்சி கைகூடாத நிலையில் தொடர்ந்தும் பல்வேறு சிக்கல்களக்ளு மத்தியில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment