சீனா பணம் எதுவும் தரவில்லை: மஹிந்த மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

சீனா பணம் எதுவும் தரவில்லை: மஹிந்த மறுப்பு!


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுக்காக சீன நிறுவனம் பெருந்தொகைப் பணம் செலவிட்டதாக நியுயோர்க் டைம்சில் வெளியான கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


நடைமுறை அரசு குறித்த நிறுவனத்தையும் இவ்விடயத்தையும் விசாரணை செய்து எவ்வித மோசடியும் இடம்பெறவில்லையென கண்டறிந்த பின்னரே துறை முக திட்டத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

எனினும், குறித்த தகவலின் அடிப்படையில் மஹிந்தவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment