
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுக்கு பல மில்லியன் டொலர் பணத்தை முதலீடு செய்ததோடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பெற்றுக்கொள்ள சீனா பெருமளவு பணத்தை பல தரப்பட்ட வழியில் செலவு செய்ததாக அண்மையில் நியுயோர்க் டைம்சில் வெளியான தகவலை மறுத்துள்ளது இலங்கைக்கான சீனத் தூதரகம்.
இலங்கையின் இறையான்மையை மதிப்பதோடு வெளியார் தலையீடுகளைத் தொடர்ந்தும் எதிர்த்து வந்த நிலையில் இலங்கை - சீனாவுக்கிடையிலான நல்லுறவு நீண்ட காலம் நீடிப்பதாகவும் இதனை வெளியார் தலையீடுகள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
அரசியல் ஆதாயத்துக்காக அமெரிக்க பத்திரிகை கதை புனைந்துள்ளதாக சீனா தெரிவிக்கின்ற அதேவேளை,அதனை அடிப்படையாகக் கொண்டு ஏலவே நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மஹிந்தவுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment