எங்கள் பக்கம் 70 பேர் சேர்ந்து விட்டார்கள்: JO - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 July 2018

எங்கள் பக்கம் 70 பேர் சேர்ந்து விட்டார்கள்: JO


கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள மீண்டும் முயற்சிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது மஹிந்த அணி.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்களையும் சேர்த்தே இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அதிலும் ஒரு சிலர் தொடர்ந்தும் மைத்ரியுடன் இணைந்தியங்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்

நீண்ட கால நாடாளுமன்ற அனுபவமுள்ள பலர் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் கடிதத்தை தவறான இடத்தில் ஒப்படைத்ததன் மூலம் அதனை கூட்டு எதிரணி இழந்திருந்தமையும் ஆர். சம்பந்தன் அப்பதவிக்கு தேர்வாகியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment