WYMA அமைப்புக்கு Projector பெற்றுக்கொள்ள நிதியுதவி - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

WYMA அமைப்புக்கு Projector பெற்றுக்கொள்ள நிதியுதவி


குருநாகல் மாவட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் வயம்ப யூத் முஸ்லிம் அசோசியேசனின் (WYMA) குறைபாடாக கானப்பட்ட Projector ஒன்றை வாங்குவதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று விசினவ பொதுஹற பிரதேசத்தில் நடைபெற்றது.

வடமேல் மாகான சபை உறுப்பினர் சமூக சேவையாளர் சஹாப்தீன் ஹாஜியார் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குளியாபிடிய பிரதேச சபை உறுப்பினர் சாஜஹான் சலீம் மற்றும் WYMA மத்திய குழு உறுப்பினர்கள் ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது மாகான சபை உறுப்பினர் சகாப்தீன் ஹாஜியாரின் தனிப்பட்ட நிதியின் மூலம் 65000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

நிதியுதவி வழங்கிய மாகான சபை உறுப்பினர் சகாப்தீன் ஹாஜியார் அவர்களுக்கும் இதற்கு உதவிய பிரதேச சபை உறுப்பினர் சாஜஹான் அவர்களுக்கும் WYMA மத்திய குழு உறுப்பினர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

-Nafas Nawfer

No comments:

Post a Comment