மருத்துவ சேவைகளுக்கான VAT நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

மருத்துவ சேவைகளுக்கான VAT நீக்கம்!


தனியார் மருத்துவமனைகளில் தங்கும் அறைகளுக்கான கட்டணங்கள் தவிர்ந்து ஏனைய மருத்துவ சேவைகளுக்கான 15 வீத பெறுமதி சேர் வரி நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.


இதனடிப்படையில் மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ நிபுணர்களின் சேவைகள் உட்பட ஏனைய மருத்துவ சேவைகளுக்கான வரி நீக்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளின் அடிப்படையில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், தனியார் மருத்துவமனைகளில் தங்கும் அறைகளுக்கான கட்டணங்களை செலுத்தக் கூடியவர்களே அங்கு தங்கியிருந்து மருத்துவ சேவையைப் பெறுவதனால் அதற்கான கட்டணத்துக்கு வரி விலக்கில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment