பிறைக்குழு அமைச்சின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

பிறைக்குழு அமைச்சின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது: அசாத் சாலி!


பெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக்குழுவின் பாரம்பரிய செயற்பாட்டையுடைத்து முஸ்லிம் விவகார அமைச்சு பிறை தீர்மானிக்கும் பொறுப்பையேற்பதை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, பெரிய பள்ளிவாசல், மேமன் சங்கம் உட்பட முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் உறுப்பினரும் உள்ளடங்கிய பிறைக்குழுவை தனியாக அமைச்சின் கீழ் கையளிப்பது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதனால் மேலும் சர்ச்சைகளே நீடிக்கும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஏலவே முஸ்லிம் விவகார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும், விமர்சனங்களும் இருக்கும் நிலையில் பிறை விடயம் கையளிக்கப்பட முடியாதது எனவும் அதற்குத் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அசாத் இன்றைய வாராந்த ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment