கூட இருந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து விட்டார்கள்: SB - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 June 2018

கூட இருந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து விட்டார்கள்: SB


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகி வந்த குரூப் 16 உறுப்பினர்கள் சிலரும் பிரதி சபாநாயகர் தேர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.


கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோபுள்ளே 53 வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும், கூட்டு எதிர்க்கட்சியினருக்குள் அவர் தொடர்பில் முழுமையான உடன்பாடு இருக்கவில்லையெனவும் கருத்து முரண்பாடுகள் இருந்ததனால் ஒரு சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் எஸ்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment