பணம்பெற்ற MPக்கள் விசாரிக்கப்பட வேண்டும்: இராவணா பலய புகார் - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

பணம்பெற்ற MPக்கள் விசாரிக்கப்பட வேண்டும்: இராவணா பலய புகார்


அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டும் என புகாரளித்துள்ளது இராவணா பலய.


118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டதனையடுத்து இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.

எனினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி அறிக்கையில் அவ்வாறு எந்தத் தகவலும் இல்லையென அண்மையில் சபாநாயகர் உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இராவணா பலய முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment