தேசிய சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான 'உலமாக்களின்' இப்தார் - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

தேசிய சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான 'உலமாக்களின்' இப்தார்


தேசிய சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான உலமாக்களின் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வொன்று, கொழும்பு - தெமட்டகொடை, ஆராமயா வீதியில் அமைந்துள்ள, மேல் மாகாண சபை உறுப்பினரும், மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில், (09) சனிக்கிழமை இடம்பெற்றது. 


சுமார் 120 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்துகொண்ட இந்த இப்தார் ஒன்று கூடல் நிகழ்வு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதான கதீப் "கலீபதுஷ் ஷாதுலி" மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி)  தலைமையில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அ.இ.ஜ.உ. தலைவரும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் உப அதிபருமான அஷ் - ஷைக் எஸ்.எம். அலியார் (பலாஹி),  நாட்டில் அமைதி சமாதானம் நிலவ இதன்போது துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார். கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதான பேஷ் இமாம் மெளலவி எம். தஸ்லீம், சம்மாங்கோடு பள்ளிவாசல் பிரதான பேஷ் இமாம் காழி அலாவுதீன் மற்றும் முத்து வாப்பா கோயா தங்கள் உள்ளிட்ட உலமாக்கள், இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

- ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment