அரசைக் கவிழ்க்க எதையும் செய்யத் தயார்: JO - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 June 2018

அரசைக் கவிழ்க்க எதையும் செய்யத் தயார்: JO


நடைமுறை அரசைக் கவிழ்க்க கூட்டு எதிர்க்கட்சி எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டிணைந்து இயங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.


ஐக்கிய தேசியக் கட்சியின் நலன் காப்பதற்காக ஜே.வி.பியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தியங்குவதாகவம் பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இவ்வாறான சதிகார அரசைக் கவிழ்க்க கூட்டு எதிர்க்கட்சி முனைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தேர்விலும் தோல்வியுற்றுள்ள கூட்டு எதிர்க்கட்சி, நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சலிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment