கீத் நொயார் கடத்தல்: மஹிந்தவிடமும் வாக்குமூலம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

கீத் நொயார் கடத்தல்: மஹிந்தவிடமும் வாக்குமூலம்!


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்பாடு செய்து வருவதாக அறியமுடிகிறது.2008ம் ஆண்டு கடத்தப்பட்ட குறித்த நபர் கரு ஜயசூரியவின் தலையீட்டிலேயே விடுவிக்கப்பட்டதாக அண்மைய விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. சபாநாயகர் ஏலவே இது குறித்து விளக்கமளித்துள்ள நிலையில் அப்போதைய ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்சவும் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மஹிந்த தொடர்பு கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கியதும் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment