ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒழுங்கான வேட்பாளரில்லை: JO - sonakar.com

Post Top Ad

Saturday, 30 June 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒழுங்கான வேட்பாளரில்லை: JO


ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடிய ஒழுங்கான வேட்பாளர் ஒருவரில்லையென தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சி நா.உ செஹான் சேமசிங்க.


ரணிலை விட ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தான் நிறுத்தப்பட்டால் வெற்றி பெற முடியும் என சரத் பொன்சேகா தெரிவிப்பதிலிருந்து இது புலப்படுவதாக தெரிவிக்கும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதே நிலையிலேயே இருப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment