ஜனாதிபதியின் பேச்சை நிராகரிக்கிறோம்: JO - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

ஜனாதிபதியின் பேச்சை நிராகரிக்கிறோம்: JO


தேர்தலில் தோல்வியுற்றதும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட நவீன வாகனங்களை மஹிந்த ராஜபக்ச எடுத்துச்செல்ல ஆசைப்பட்டதால் தான் விட்டுக்கொடுத்து விட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையை முற்றாக நிராகரிப்பதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.அத்துடன் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்கும் வரையில் அப்பதவியில் நீடிக்கும் அதிகாரம் இருந்த போதிலும் அதிகாலை 2 மணிக்கே ஜனாதிபதி மாளிகையை விட்டு மஹிந்த வெளியேறி விட்டதாகவும் அத்தருணத்தில் வானூர்தியை உபயோகிக்க பதவிப்பிரமாணம் செய்யாத (அவ்வேளையில்) யாரிடமும் அனுமதி கோரியிருக்க வேண்டிய அவசியமில்லையெனவும் கூட்டு எதிர்க்கட்சி சார்பாக டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, எஞ்சியிருந்த இரு வாகனங்களை ரணில் விக்கிரமசிங்க கொண்டு சென்று விட்டதாகவும் ஈற்றில் தான் பழைய வாகனங்களையே உபயோகித்ததாகவும் மைத்ரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment