ஸ்ரீலங்கன் விமான சேவை: நாளை பயண நேரங்களில் மாற்றம் - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

ஸ்ரீலங்கன் விமான சேவை: நாளை பயண நேரங்களில் மாற்றம்


இந்து சமுத்திரத்தில் பிறிதொரு நாட்டினால் மேற்கொள்ளப்படவுள்ள பரீட்சார்த்த நடவடிக்கையொன்றின் நிமித்தம் நாளை 3ம் திகதிக்கான விமான சேவைகளுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்ரீலங்கன்.


சிங்கப்பூர், பெங்கொக், மலேசியா, ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளே நேர மாற்றத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளதுடன் 1979 என்ற தொடர்பிலக்கம் ஊடாகவோ பயண முகவர் ஊடாகவோ பயணிகள் புதிய நேர விபரத்தை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏவுகணை பரீட்சார்த்த நடவடிக்கையொன்றின் பின்னணியில் கடந்த வருடம் ஸ்ரீலங்கன் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டதக்கது.

No comments:

Post a Comment