மஹிந்தவுக்கு எதிராக ரஞ்சன் FCIDல் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

மஹிந்தவுக்கு எதிராக ரஞ்சன் FCIDல் முறைப்பாடு!


மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்கு சீனா நிதியுதவி செய்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறையிட்டுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.மஹிந்தவின் தேர்தல் செலவுக்கு ஆகக்குறைந்த 7.6 மில்லியன் டொலர் சீனாவிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே தான் முறையிட்டிருப்பதாக ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment