டிசம்பருக்குள் தேர்தலை நடாத்த வாய்ப்பு: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Friday, 29 June 2018

டிசம்பருக்குள் தேர்தலை நடாத்த வாய்ப்பு: தேசப்பிரிய


இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்பு மலர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண எல்லை நிர்ணயம் தாமதமாவதே தேர்தல் தாமதமாவதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நேற்றைய சந்திப்பில் அது தொடர்பான அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போதே டிசம்பருக்குள் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்பு குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment