மரண அச்சுறுத்தல்: சந்தியா CIDயில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

மரண அச்சுறுத்தல்: சந்தியா CIDயில் முறைப்பாடு!


பொதுபலசேனா பயங்கரவாதி ஞானசார பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார் திருமதி சந்தியா எக்னலிகொட.நீதிமன்றுக்குள் வைத்து ஞானசாரவால் அச்சுறுத்தப்பட்ட சந்தியா, திடமாகப் போராடியதன் பின்னணியில் ஞானசாரவுக்கு ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்டிருந்த ஞானசார அங்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே தனக்கு பாரிய அளவில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக சந்தியா முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment