CID விசாரணைக்கு தயாசிறி ஆஜர்! - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

CID விசாரணைக்கு தயாசிறி ஆஜர்!



அர்ஜுன் அலோசியசின் பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 1 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் விசாரிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பினை ஏற்று தயாசிறி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.



குறித்த பணம் ஏதோ ஒரு வகையில் வந்ததாகவும் அது தனக்குத் தெரியாதெனவும் முன்னார் தயாசிறி மறுத்திருந்தார்.

இதேவேளை சரத் பொன்சேகா தமக்கு 1 லட்சம் ரூபா வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை சுஜீவ சேனசிங்கவுக்கு 3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment